ஊத்தங்கரை டாஸ்மாக் பின்புறம் உடலில் சிறு காயங்களுடன் ஒருவர் உயிரிழப்பு
By DIN | Published On : 28th May 2020 12:21 PM | Last Updated : 28th May 2020 12:21 PM | அ+அ அ- |

ஊத்தங்கரை டாஸ்மாக் பின்புறம் உடலில் சிறு காயங்களுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். குடிபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என பல்வேறு கோணத்தில் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பின்புறம் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது, இந்த கடையின் பின்புறம் வியாழக்கிழமை காலை 42 வயதுடைய ஒருவர் உடலில் சிறு காயங்களுடன் பிணமாக இருப்பதாக ஊத்தங்கரை காவலருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் அவர் பெயர் ராஜா(42), இவரது தந்தை அந்தோனிராஜ், ஊத்தங்கரை காமராஜர் நகரை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இவர் உடலில் சிறிய காயங்கள் உள்ளன, புதன்கிழமை மாலை நேரத்தில் மது குடிப்பதற்கு அந்த கடைக்கு வந்துள்ளார். பிறகு அதிக மழை பெய்த நேரத்தில் டாஸ்மாக் பின்புற இடத்தில் இருந்திருக்கலாம் எனவும், குடிபோதையில் நண்பர்களுடன் தகராறில் அடித்து கொலை செய்து இருப்பார்களா அல்லது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என பல்வேறு கோணத்தில் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டி, காவல் ஆய்வாளர் குமரன், துணை ஆய்வாளர் சிற்றரசு ஆகியோர் ,உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊத்தங்கரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.