ரயில்நிலையம், நடைமேடைகளில் உணவகங்களை திறக்க அழுத்தம் கொடுக்காதீர்கள்: விற்பனையாளர்கள் சங்கம்

கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் ரயில்நிலையங்களிலும், ரயில்வே நடைமேடைகளிலும் உணவகங்கள்,
ரயில்நிலையம், நடைமேடைகளில் உணவகங்களை திறக்க அழுத்தம் கொடுக்காதீர்கள்: விற்பனையாளர்கள் சங்கம்


கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் ரயில்நிலையங்களிலும், ரயில்வே நடைமேடைகளிலும் உணவகங்கள், சிற்றுண்டி கடைகளை திறக்கக்கூறி எங்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். அதற்கான சேவையை தொடங்குவதற்கு நாங்கள் இன்னும் தயாராகவில்லை என ரயில்வே வாரியத்துக்கு விற்பனையாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரித்தை நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ரயில்வே சிற்றுண்டிக்கடைகள், உணவகங்கள் மூடப்பட்டது.  

இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் தில்லியிலிருந்து 15 சிறப்பு ராஜ்தானி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. "ஜூன் 1-ம் தேதி முதல் 100 ஜோடி பயணிகள் ரயில்கள் மட்டும் இயக்கப்பட உள்ளன."

இதைக் கருத்தில்கொண்டு கடந்த 21-ஆம் தேதி ரயில்வே வாரியம் ஓர் அறிவிப்பு வெளியிட்டது. அதில் “ நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உணவகங்கள், சிற்றுண்டி கடைகளைத் திறக்க ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது.

ஆனால், அனைத்துப் பயணிகளும் பார்சல் வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதியில்லை இதற்கு மண்டல மேலாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் ரயில்வே வாரியத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ரயில்நிலைய உணவ விற்பனையாளர்கள் நலகூட்டமைப்பின் தலைவர் ரவீந்தர் குப்தா ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் “யாருமே நீண்டநாட்களாக தங்கள் கடைகளை பூட்டி வைத்து வியாபாரம் பார்க்காமல் இருக்க விரும்புவதில்லை, வீட்டில் அமைதியாக இருக்க மாட்டார்கள். ஆனால் கடைகளை திறப்பதற்கு ஏதுவான சூழல் அமைய வேண்டும்.

ரயில்நிலையங்களிலும், ரயில்வே நடைமேடைகளிலும் உணவகங்களையும், சிற்றுண்டிக் கடைகளையும் திறப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து நிலவும் பொது முடக்கம், கட்டுப்பாட்டு மண்டலங்கள், சிவப்பு மண்டலங்கள், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இதுவரை சந்தித்திராத சூழலை எதிர்கொள்கிறோம்.

உணவகங்கள், சிற்றுண்டிகளில் பணியாற்றிய பல்வேறு வெளிமாநிலத்தவர்கள் பொதுமுடக்கம் காரணமாக சொந்த மாநிலம் சென்றுவிட்டனர். நடைமேடைகளில் கடைகளைத் திறந்தால் கடையின் உரிமையாளருக்கும், பொருள்களுக்கம் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை, பாதுகாப்பு மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

"ஷ்ராமிக் ரயில்களில் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடைமேடைகளில் இருக்கும் கடைகளை உடைத்து கொள்ளையடிப்பதும், அங்குள்ள பொருட்களை எடுத்துச்செல்வது என பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.  அங்கு கடையத் திறந்துவைத்தால், அங்கு பணியாற்றும் ஊழியருக்கு பாதுகாப்பு இருக்குமா, பொருள்களை இழந்தால் இழப்பீடு தருவீர்களா? உள்ளூர் அதிகாரிகள் பொருப்பேற்பார்களா? ”என்று குப்தா கடிதத்தில் கேட்டார்.

ஆதலால் ரயில்வே நிலையங்களிலும், ரயில்வே நடை பாதைகளிலும் உணவகங்கள், சிற்றுண்டிகள் மீண்டும் திறப்பதற்கு போதுமான காலஅவகாசம் தர வேண்டும் எனக் கோருகிறோம். 

"எனவே, கடைகளைத் திறக்கூறி அதிகாரிகள் மூலம் அழுத்தம் கொடுப்பதும், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பேசி கடைகளை திறக்கக் கோருவதையும் தவிர்க்க வேண்டும். சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட உள்ள நிலையில் உணவங்களை இப்போது திறப்பதில் அர்த்தமாக இல்லை. ரயில் சேவை முழுமையாக வந்து, இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் சில பயணிகளுக்காக உணவகங்களைத் திறப்பது கடினம்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒன்பதாயிரம் ரயில் நிலையங்களில் சுமார் ஒரு லட்சம் நிலையான  உணவகங்கள் அல்லது  சிற்றுண்டி கடைகளை உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com