இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,73,763; பலி 4971 -ஆக உயர்வு

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 173,763 -ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை  4971-ஆகவும் அதகரித்துள்ளது. 
இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,73,763; பலி 4971 -ஆக உயர்வு



புதுதில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 173,763 -ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை  4971-ஆகவும் அதிகரித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 7,964 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 173,763 ஆக உயர்ந்துள்ளது. 265 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 82,370 பேர் குணமடைந்துள்ளனர். 86,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,437 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 62,228 ஆக உயர்ந்துள்ளது. 26,997 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,098 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 36,710 ஆக உயர்ந்துள்ளது, புதிதாக 38 பேர் பலியாகயுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது. 

மகாராஷ்டிரத்தை அடுத்து தமிழ்நாடு 20,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தலைநகர் தில்லியில் 17,386 பேரும், ம் குஜராத்தில் 15,934 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில் புதிதாக 192 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுபள்ளது.  இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தூர் மாவட்டத்தில் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 7,645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்காவது கட்ட பொது ஊரடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவடைய உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com