நாட்டு மக்களின் கௌரவம் கணிசமாக உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

"கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு நிர்வாகமானது, ஊழிலிருந்து தன்னை தனியே பிரித்தெடுத்துக்கொண்டது. நேர்மையான நிர்வாகமாக மாறியுள்ளது. நாட்டு மக்களின் கௌரவம் கணிசமாக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி தொடா்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்து சனிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்து இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அனைத்து மொழிகளிலும் எழுதியுள்ள கடிததத்தில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு நிர்வாகமானது, ஊழிலிருந்து தன்னை தனியே பிரித்தெடுத்துக்கொண்டது. நேர்மையான நிர்வாகமாக மாறியுள்ளது. நாட்டு மக்களின் கௌரவம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஏழைகளின் கௌரவம்  கணிசமாக உயர்ந்துள்ளது." எனக்கூறி ஆட்சிக்கு வந்ததிதிலிருந்து எடுக்கப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகளை பிரதமர் மேற்கோள்காட்டியுள்ளார். 

“கடந்த ஆண்டுகளில் நாடு ஒரு வரலாற்று முடிவுகளை எடுத்து வேகமாக முன்னேறியது,  ஆனால், கரோனா தொற்று நெருக்கடி காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு குறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். கரோனா தொற்று தடுப்பில் இந்தியா எடுத்திருந்த சிறப்பான முடிவுகளை போல, பொருளாதார மறுமலர்ச்சியிலும் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணதாக சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும்." 

“இந்த நெருக்கடியான காலகட்டத்தில் யாரும் அசாதாரண சூழலை எதிர்கொள்ளவில்லை என நிச்சயமாக கூறிவிட முடியாது. நாட்டின் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு,குறு உற்பத்தியாளர்கள், கைவினைகலைஞர்கள், வணிகர்கள் என "சக இந்தியர்கள்" இக்காலகட்த்தில் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.“

“இருப்பினும், நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பேரழிவுகளாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்". பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு சைக்கிள் மூலமாகவும், வெறும் கால்களுடன் நடந்தும், லாரிகளில் பயணித்தும் சென்றடைகின்றனர். ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதன் காரணமாக இளைஞர்கள் விரக்தியடைந்துள்ளனர்.“

“நாடு பல எதிர்ப்புகளையும், சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளன. நான் தேசத்தின் முன்னேற்றத்திற்காக இரவும், பகலும் உழைக்கின்றேன். என்னில் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டு மக்களிடத்தில் குறைபாடுகள் இருக்க முடியாது. ஆகவே, நான் நமது மக்களையும், அவர்களுடைய பலத்தையும் நம்புகின்றேன். ஆகவே மக்களாகிய நீங்கள் என்னை நம்புங்கள்” என்று அவர் தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற தனது மந்திரத்தை மீண்டும் வலியுறுத்தினார். 

கடந்த 2019 இதே நாளில் இந்தியாவிற்கு ஒரு "பொற்காலம்" தொடங்கியது,  அவர் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததை குறிப்பிட்ட பிரதமர் மோடி, பல தசாப்தங்களுக்குப் பிறகுதான் மக்கள் முழு பெரும்பான்மையுடன் முந்தைய ஆட்சியிலிருந்த அதே கட்சிக்கு வாக்களித்திருந்தனர் என்றும் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் வாக்களித்தனர்," என்று அவர் கூறினார்.

"உலகளாவிய தொற்றுநோய் காரணமாக இது நிச்சயமாக நெருக்கடியான நேரம், ஆனால் இது நாட்டிற்கு உறுதியான தீர்வுக்கான நேரம். 130 கோடி மக்களும் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஒருபோதும் ஒரு துன்பத்துடன் வழிநடத்தப்படமாட்டார்கள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்."

"சாதாரண காலகட்டங்களில், நான் உங்கள் மத்தியில் இருந்திருப்பேன். இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகள் அதை அனுமதிக்கவில்லை. இது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய நேரம்.  அதனால்தான், இந்த கடிதத்தின் மூலம் உங்கள் ஆசீர்வாதங்களை நான் தேடுகிறேன்."

“கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு நிர்வாகமானது, ஊழிலிருந்து தன்னை தனியே பிரித்தெடுத்துக்கொண்டது. நேர்மையான நிர்வாகமாக மாறியுள்ளது. நாட்டு மக்களின் கௌரவம்  கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஏழைகளின் கௌரவம்  கணிசமாக உயர்ந்துள்ளது.“ எனக்கூறி ஆட்சிக்கு வந்ததிதிலிருந்து எடுக்கப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகளை பிரதமர் மேற்கோள்காட்டினார். “2016 இல் நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019 இல் பாகிஸ்தான் எல்லையில் நடத்திய விமான தாக்குதல், போன்றவையும், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து  நாட்டு மக்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பின் உணர்வை வளர்த்தது.“ என்று கூறினார். மேலும், அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவர் நினைவு கூர்ந்து குறிப்பிட்டிருந்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை இந்தியாவின் இரக்கத்தை உள்ளடக்கிய உணர்வின் வெளிப்பாடு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

தனது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளால் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்துள்ளதாகவும், இது போன்ற பல வரலாற்று நடவடிக்கைகள் மற்றும் தேசி நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் எடுக்கப்பட்ட பல முடிவுகளை அரசு வீரியத்துடன் இனி வரும் காலகட்டங்களில் அமல்படுத்தும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

“கரோனா தொற்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய தொடங்கியவுடன், பல உலக நாடுகள், இந்தியா உலகிற்கு ஒரு பிரச்னையாக மாறக்கூடும் என அஞ்சினர். ஆனால், இன்று பல உலக நாடுகள் நம்மை உற்று பார்க்கும் வித்தினை மக்களாகிய நீங்கள் மாற்றியமைத்துள்ளீர்கள். இந்தியார்களின் ஆற்றல் என்பது கூட்டு வலிமை என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். இந்த ஆற்றலானது உலகின் சக்திவாய்ந்த பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது இணையற்றது“ என மோடி குறிப்பிட்டுள்ளார். 

மேலும், "மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன், தொற்றுக்கு எதிராக களத்தில் நின்றவர்களுக்கு ஆதரவாக ஒற்றுமையோடு கைதட்டி, விளக்கேற்றி தங்களுடைய ஒற்றுமையை மக்களாகிய நீங்கள் வெளிக்காட்டினீர்கள். இவ்வாறான நெருக்கடி நிறைந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் தங்கள் ஒற்றுமையை நிரூபித்துள்ளனர்".என மோடி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com