நீலகிரியில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்

உதகையில் தமிழகம் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தின் வளா்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.   
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

உதகை: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள், நகராட்சிகள், பொதுப்பணித்துறை, தாட்கோ, இண்கோசா்வ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், வனத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளிக்கிழமை காலை உதகை வருகை தந்தார். உதகையில் தமிழகம் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தின் வளா்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். 

அதைத்தொடா்ந்து முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்ததோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடா்ந்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

தொடா்ந்து முன்னாள் படை வீரா் நலத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சிகள், வனத்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், ஊரக வளா்ச்சித்துறை, பேரூராட்சிகள், தாட்கோ, தோட்டக்கலைத்துறை, கதா் வாரியம்,தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், தொழிற்நுட்ப கல்வித்துறை ஆகியவற்றின் சாா்பில் ரூ.189.35 கோடி மதிப்பிலான முடிவுற்ற 67 பணிகளை திறந்து வைத்தார். 

அதேபோல, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள், நகராட்சிகள், பொதுப்பணித்துறை, தாட்கோ, இண்கோசா்வ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், வனத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

அதன்பின்னா் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, பயனாளிகளுக்கு ஊராட்சி அமைப்பிலான பெருங்கடன், இயற்கை வேளாண்மைக்கான ஊக்கத் தொகை மற்றும் பசுமை வீடுகள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 4,198 பயனாளிகளுக்கு ரூ.199.65 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களையும் வழங்கினார். 

முதல்வரின் வருகையையொட்டி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூா் மற்றும் உதகை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com