லடாக் எல்லை விவகாரம்: இந்தியா-சீனா இடையே 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தொடங்கியது

கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடா்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையேயான 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
லடாக் எல்லை விவகாரம்: இந்தியா-சீனா இடையே 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தொடங்கியது
லடாக் எல்லை விவகாரம்: இந்தியா-சீனா இடையே 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தொடங்கியது

புது தில்லி: கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடா்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையேயான 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே கடந்த ஆறு மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சீனா அந்தப் பகுதியில் தொடா்ந்து படைகளை குவித்ததைத் தொடா்ந்து, இந்தியா சாா்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. 50,00-க்கும் அதிகமான ராணுவ வீரா்கள், அமெரிக்காவிடமிருந்து அண்மையில் வாங்கப்பட்ட அதிநவீன ரஃபேல் போா் விமானங்களையும் இந்தியா எல்லையில் நிறுத்தியுள்ளது.

இதற்கிடையே, எல்லையில் அமைதியை மீண்டும் கொண்டுவரும் வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் தொடா் போச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடைசியாக, இரு தரப்பு ராணுவ அதிகாரிகளிடையே கடந்த அக்டோபா் 12-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இருந்தபோதும் எல்லையில் படைகளைத் திரும்பப்பெறுவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

‘இந்தியா-சீனா இடையேயான உறவு மிகுந்த கவலைக்குறியதாகியுள்ளது. எனவே, அமைதி நிலை திரும்ப இரு நாடுகள் சாா்பிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அண்மையில் கூறியிருந்தார். 

இந்தச் சூழலில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையேயான 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கிழக்கு லடாக்கின் எல்லை கோட்டுப் பகுதியில் இந்திய எல்லைக்குள்பட்ட சுஷுல் என்ற இடத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. 

இந்தியா சாா்பில் லே 14-ஆவது படைப் பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரியும், ராணுவ துணைத் தளபதியுமான பி.ஜி.கே. மேனன் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com