11 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: அதிக இடங்களில் பாஜக வெற்றி

மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்


மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருந்த 28 பேரவைத் தொகுதிகள், குஜராத்தில் காலியாக இருந்த 8 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் காலியாக இருந்த 7 தொகுதிகளுக்குக் கடந்த 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

நாகாலாந்து, ஜாா்க்கண்ட், ஒடிசா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த தலா இரு பேரவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானா, ஹரியாணா, சத்தீஸ்காில் காலியாக இருந்த தலா 1 இடங்களுக்கும் கடந்த 3-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.

மணிப்பூா் சட்டப் பேரவையில் காலியாக இருந்த 5 இடங்களுக்கு கடந்த 7-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. அனைத்து மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மத்தியப் பிரதேசம் தவிர மற்ற 10 மாநிலங்களில் மொத்தம் 31 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 7 தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.

மாநிலம்மொத்த தொகுதிகள்வெற்றி பெற்றவர்கள்
குஜராத்8பாஜக - 8
உத்தரப் பிரதேசம்7

பாஜக - 6

சமாஜவாதி - 1

ஜார்க்கண்ட்2

காங்கிரஸ் - 1

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா -1 

கர்நாடகம்2பாஜக - 2
நாகாலாந்து2

தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி - 1

சுயேச்சை - 1

ஒடிசா2பிஜு ஜனதா தளம் - 2
மணிப்பூர்5

பாஜக - 4

சுயேச்சை - 1

ஹரியாணா1காங்கிரஸ் - 1
சத்தீஸ்கா்1காங்கிரஸ் - 1
தெலங்கானா1பாஜக - 1

மத்தியப் பிரதேசம்:

28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. முடிவுகள் வெளியான 22 தொகுதிகளில் பாஜக 16, காங்கிரஸ் 6 இடங்களை வென்றுள்ளன.

மீதமுள்ள 6 தொகுதிகளுக்கு தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. அதில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com