கோவா முன்னாள் ஆளுநர் மிருதுளா சின்ஹா காலமானார்

பாஜகவின் மூத்த தலைவரும், கோவாவின் முன்னாள் ஆளுநருமான மிருதுளா சின்ஹா புதன்கிழமை காலமானார்.
மிருதுளா சின்ஹா
மிருதுளா சின்ஹா

பாஜகவின் மூத்த தலைவரும், கோவாவின் முன்னாள் ஆளுநருமான மிருதுளா சின்ஹா புதன்கிழமை காலமானார்.

பிகாரைச் சேர்ந்த சின்ஹா (வயது 77) 1942ஆம் ஆண்டு பிறந்தார். இவரது கணவர் ராம் கிருபால் சிங் மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்தவர்.

இந்நிலையில் 1981ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த சின்ஹா, கட்சியின் துணைத் தலைவராகவும், பாஜக பெண்கள் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டார்.

இதையடுத்து கோவாவின் ஆளுநராக 2014 முதல் 2019 வரை பணியாற்றினார். இதனிடையே தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராகவும் 2014ஆம் ஆண்டு மோடியால் நியமிக்கப்பட்டார்.

மேலும், சின்ஹா மிகவும் பிரபலமான எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், உடல்நலக் குறைவால் புதன்கிழமை மாலை காலமானார்.

இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா மற்றும் கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com