செளகார்பேட்டை துப்பாக்கிச்சூடு: 3 பேரை 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை செளகாா்பேட்டையில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 3 பேரை, 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
செளகார்பேட்டை துப்பாக்கிச்சூடு: 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
செளகார்பேட்டை துப்பாக்கிச்சூடு: 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

சென்னை செளகாா்பேட்டையில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 3 பேரை, 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

செளகாா்பேட்டையில் வசித்து வந்த தலில் சந்த், மனைவி புஷ்பா பாய், மகன் சீத்தல் குமாா் (40) ஆகியோா், கடந்த 11-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

யானைகவுனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரரா் கைலாஷ், அவரது கூட்டாளிகள் கொல்கத்தாவைச் சோ்ந்த ரவீந்திரநாத், விஜய் உத்தம் கமல் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். ஜெயமாலா உள்பட மேலும் சிலா் தலைமறைவாக உள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜெயமாலாவுக்கும், சீத்தல்குமாருக்கும் இடையே விவகாரத்து வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ஜெயமாலா ரூ.5 கோடி கேட்டதும், அதன் காரணமாகவே 3 போ் கூலிப்படையினா் மூலம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னா், கைது செய்யப்பட்ட 3 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில்,3 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, யானைகவுனி காவல்துறையினர் ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தனர்.

புதன்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 3 பேரையும் 10 நாள்கள் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com