ஹாத்ராஸ் வன்கொடுமை : 510 சட்ட மாணவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம்

ஹாத்ராஸ் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்ட மாணவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹாத்ராஸ் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்ட மாணவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஹாத்ராஸில் ஒரு இளம் பெண்ணை பாலியல் வான்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்த வழக்கில் உத்தரபிரதேச காவல்துறையினர் தவறாக செயல்படுவதாகவும் நாடு முழுவதும் சட்டம் பயிலும் 510 மாணவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com