சிறுதாவூரில் உள்ள சுதாகரன், இளவரசி சொத்துக்கள் முடக்கம்

சிறுதாவூரில் உள்ள சுதாகரன், இளவரசி சொத்துக்கள் சுமார் 55 ஏக்கரை முடக்கிய வருமான வரித்துறையினர்கள் நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டினார்கள்.
சிறுதாவூரில் வருமான வரித்துறை முடக்கிய பங்களா
சிறுதாவூரில் வருமான வரித்துறை முடக்கிய பங்களா

சிறுதாவூரில் உள்ள சுதாகரன், இளவரசி சொத்துக்கள் சுமார் 55 ஏக்கரை முடக்கிய வருமான வரித்துறையினர்கள் நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டினார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் ஊராட்சியில் கருங்குழிபள்ளத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளாருமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பண்ணைவீட்டுடன் உள்ளது.

அவரது மறைவிற்கு பிறகு சசிகலா கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு அவர் சிறைக்கு சென்ற பின்னர் தற்பொழுது சிறுதாவூர் பங்களா தீபக் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முக்கிய நிகழ்வாக இன்று காலை 10 மணியளவில் அஇஅதிமுக கட்சியின் 2021 சட்டமன்ற  தேர்தலில் முதல்வர் வேட்பளாராக தற்பொழுதைய முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று பினாமி சொத்துக்கள் தடைச்சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர்கள். சசிகலாவின் சொத்துக்களையும் அவரது உறவினர் சொத்துகளையும் முடக்கி நோட்டீஸ் ஓட்டிவருகின்றனர்கள். அந்த வகையில் இங்குள்ள சிறுதாவூர் பங்களா நுழைவுவாயிலில் சுமார் மாலை 5 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டுவருமான வரித்துறையின் அலுவலர்கள் தண்டோரா போட்டு  திரு.வி.என்.சுதாகரன், திருமதி.ஜெ.இளவரசி ஆகியோர்கள் பெயரில் கடந்த 1994 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட சர்வே எண்கள் அடங்கிய சுமார் 55.16 செண்ட் இடத்தை முடக்குவதாக நோட்டிஸ்சில் குறிப்பிட்டுள்ளனர்கள்.

சட்டம் 1998 உட்பிரிவு  24 (1) 24 (3) ஆகிய பிரிவுகளின்படி அடுத்த 90 நாட்களுக்கு இந்த சொத்தின் எந்தவிதமான பரிமாற்றமும் செய்யக்கூடாது என தடை விதித்துள்ளனர்கள். இதன் விவரத்தை வி.என்.சுதாகருக்கும், ஜெ.இளவரசிக்கும், நகல் காப்பியினை ஜெ.தீபக், ஜெ.தீபாவுக்கும், திருப்போரூர் சார்பதிவாளாருக்கும் அனுப்பியுள்ளனர்கள். நோட்டீஸ் ஓட்டப்பட்டதை தொடர்ந்து இங்கு ஒரு மணிநேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com