இந்தியா முழுவதும் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை : யுஜிசி

இந்தியா முழுவதும் அங்கிகாரம் இல்லாமல் செயல்பட்ட போலியான 24 பல்கலைக்கழகத்தின் பெயர்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது.
இந்தியா முழுவதும் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை : யுஜிசி
இந்தியா முழுவதும் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை : யுஜிசி

இந்தியா முழுவதும் அங்கிகாரம் இல்லாமல் செயல்பட்ட போலியான 24 பல்கலைக்கழகத்தின் பெயர்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்திற்கு புறம்பாகவும், அங்கிகாரம் பெறாமலும் இயங்கிய 24 பல்கலைக்கழகத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர். இதுவரை அந்தப் பல்கலைக்கழகங்கள் எந்த சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் (8), தில்லி (7), ஒடிசா (2), மேற்கு வங்காளம் (2), கர்நாடகம் (1), கேரளம் (1), மகாராஷ்டிரம் (1), ஆந்திரம் (1) மற்றும் புதுச்சேரி (1) பல்கலைக்கழகங்கள் போலியானதாக யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் வாரணசேய சமஸ்கிருத விஸ்வவித்யாலயா, மஹிலா கிராம் வித்யாபித், காந்தி இந்தி வித்யாபித், கான்பூர் தேசிய மின் வளாக ஹோமியோபதி பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்த பல்கலைக்கழகம், உத்தரபிரதேசம் விஸ்வவித்யாலயா, மஹாராணா பிரதாப் சிக்ஷா நிகேதன் விஸ்வவித்யாலயா, பிரதாப்கர் மற்றும் இந்திரபிரஸ்தா சிக்ஷ பரிஷத் ஆகிய 8 பல்கலைக்கழகம்.

டெல்லியில் கொமர்ஷல் யுனிவர்சிட்டி லிமிடெட், ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ஏடிஆர் மைய நீதித்துறை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், விஸ்வகர்மா சுய வேலைவாய்ப்பு திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஆத்யாத்மிக் விஸ்வத்யாலயா (ஆன்மீக பல்கலைக்கழகம்) ஆகிய 7 பல்கலைக்கழகம்.

மேற்கு வங்காளத்தில் இந்திய மாற்று மாற்று மருத்துவ நிறுவனம்,  மாற்று மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய 2 பல்கலைக்கழகம்.

ஒடிசாவில் நபபாரத் சிக்ஷா பரிஷத், ரூர்கேலா மற்றும் வடக்கு ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகிய 2 பல்கலைக்கழகம்.

கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா தலா ஒரு போலி பல்கலைக்கழகம் உள்ளன.

அவை - ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி, புதுச்சேரி; கிறிஸ்து புதிய ஏற்பாடு ஆந்திரப் பிரதேசம்; ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர்; செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கேரளம் மற்றும் படகன்வி சர்க்கார் உலக திறந்த பல்கலைக்கழக கல்வி சங்கம், கர்நாடகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com