உ.பி. இடைத்தேர்தலில் 7 தொகுதிகளில் 68 பேர் வேட்புமனு தாக்கல்

உத்தரபிரதேசத்தில் நவம்பர் 3 ஆம் தேதி 7 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் போட்டியிட 68 பேர் இதுவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

உத்தரபிரதேசத்தில் நவம்பர் 3 ஆம் தேதி 7 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் போட்டியிட 68 பேர் இதுவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 7 தொகுதிகளில் 6 தொகுதிகள் பா.ஜ.க. வசமும், ஒரு தொகுதி சமாஜவாதி வசமும் இருந்த தொகுதிகளாகும். 

இந்நிலையில், இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவு நவம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது, வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் வியாழக்கிழமை 36 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததால், 7 சட்டசபை இடங்களுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 68 ஆக உயர்ந்துள்ளன.


இதில் தியோரியா தொகுதியில் இருந்து அதிகபட்சமாக 14 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, மல்ஹானி தொகுதியில் 12 பேர், நெளகாவன் சதாத் தொகுதியில் 11 பேர், கட்டம்பூர் மற்றும் டண்ட்லா தொகுதிகளில் தலா 8 பேரும், புலந்த்ஷாஹர் தொகுதியில் குறைந்தபட்சமாக 6 பேர் தாக்கல் செய்தனர்.

பாஜக, எஸ்பி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய நான்கு முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன, அவர்களில் பெரும்பாலோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com