அருணாசலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

அருணாசல பிரதேசத்தில் வியாழக்கிழமை முதல் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேசத்தின் சுற்றுலாத் தலம்
அருணாசல பிரதேசத்தின் சுற்றுலாத் தலம்

அருணாசல பிரதேசத்தில் வியாழக்கிழமை முதல் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருணாசல பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில்,

முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து சுற்றுலா போக்குவரத்து மற்றும் தரை கையாளுதல் சேவைகளும் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் சுற்றுலா வழிகாட்டு நபர்கள் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்படும்.

உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள், தங்கள் வாடிக்கையாளர்கள் அங்கிகரிக்கப்பட்ட கரோனா பரிசோதனை மையத்தில் 72 மணிநேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளை வைத்திருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும். 

சுற்றுலாப் பயணிகள் ஒரு நபருக்கு இரண்டு மீட்டர் தூரத்துடன் சமூக தொலைதூர விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். குழுவாக சுற்றுலா வருபவர்கள் தங்கள் குடும்ப நபர்களிடமிருந்து குறைந்தது இரண்டு மீட்டர் தொலைவில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

எந்தவொரு சுற்றுலா தலத்தின் வளாகத்திலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு முகமூடியை அணிய வேண்டும். இணைய பணபரிவர்த்தனையை முடிந்த அளவு அனைத்து இடங்களில் கடைபிடிக்க வேண்டும். சுற்றுலா பயணி, சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஓட்டுநர் ஆரோக்யா சேது செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com