கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலை மூடல் : லாரி ஓட்டுநர்கள் தவிப்பு

கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையை கடக்க காத்திருக்கும் லாரிகள்
நெடுஞ்சாலையை கடக்க காத்திருக்கும் லாரிகள்

கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றது. இந்நிலையில், கலாபுராகி மாவட்டத்தில் பீமா நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அவ்வழியே கடக்கும் தேசிய நெடுஞ்சாலை 50 யின் பாலம் காவல்துறையால் மூடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்லவேண்டிய லாரி மற்றும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து லாரி ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், நாங்கள் 2 நாள்களாக இந்த இடத்தில் காத்துக்கொண்டுள்ளோம், மேலும் சாப்பிட உணவும், குடிக்க தண்ணீரும் இல்லாமல் தவித்து வருகின்றோம். நதியின் நீர் பாலத்திற்கு 6 அடி கீழே தான் உள்ளது, இருப்பினும் எங்களை கடக்க அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமை பொறியாளர் ஜெகநாத் ஹலிங்கே கூறுகையில், கலபுராகி மாவட்டத்தின் அப்சல்பூரில் உள்ள சோமா பாரேஜிலிருந்து பீமா நதிக்கு 6,30,000 டி.எம்.சி. நீர் இன்று மாலை 3 மணிக்கு வெளியேற்றப்பட்டது, விரைவில் நீர்மட்டம் குறைந்தவுடன் நெடுஞ்சாலை திறக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com