வீட்டிலிருந்து வேலை: மன அழுத்தத்தால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 21st October 2020 09:31 PM | Last Updated : 21st October 2020 09:38 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
வீட்டிலிருந்து வேலை செய்வதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் ஜிகர் காந்தி (வயது 32). இவர் கடந்த 3 ஆண்டுகளாக நொய்டாவில் உள்ள நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பிரேத பரிசோதனையிலும் உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து காந்தியின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டபோது, கடந்த சில நாள்களாக வேலை குறித்து மன அழுத்தத்தில் இருந்ததாக கூறினர்.
கரோனா பொது முடக்கத்தால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.