ஆப்கனில் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் பலி
By IANS | Published On : 23rd October 2020 03:04 PM | Last Updated : 23rd October 2020 03:04 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் மாகாணத்தில் தலிபான் தாக்குதலில் 20 க்கும் மேற்பட்ட ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
காஷ்ரோட் ஆளுநர் ஜலீல் அஹ்மத் வட்டாண்டோஸ்ட் கூறுகையில், காஷ்ரோட் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகியுள்ளனர், மேலும் 6 வீரர்களை பிணைக் கைதிகளாக தலிபான்கள் கொண்டு சென்றுள்ளதாக கூறினார்.
தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த போதிலும் நாடு முழுவதும் சுமார் 24 மாகாணங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.