ஸ்ரீநகர் மத்திய ரிசர்வ் காவல் படையின் முதல் பெண் ஐ.ஜி.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஸ்ரீநகரில், மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி.யாக முதல்முறையாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர் மத்திய ரிசர்வ் காவல் படை ஐ.ஜி. சாரு சின்ஹா
ஸ்ரீநகர் மத்திய ரிசர்வ் காவல் படை ஐ.ஜி. சாரு சின்ஹா

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஸ்ரீநகரில், மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி.யாக முதல்முறையாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் இருந்து 1996-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் சாரு சின்ஹா. இவர் தற்போது ஸ்ரீநகர் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற கடினமான பணியில் அவர் எதிர்கொள்வது முதல்முறையல்ல, முன்னதாக பிகார் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி.யாக பொறுப்பேற்று நக்சல்களை எதிர்கொண்டிருக்கிறார்.

அவரது தலைமையின் கீழ், பல்வேறு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர், அவர் ஜம்முவின் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். அங்கு சிறப்பாக பணியாற்றியதால், தற்போது ஸ்ரீநகர் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகர் பகுதியில் 2005-ல் மத்திய ரிசர்வ் காவல் படை தொடங்கப்பட்டது. இதுவரை ஐ.ஜி.யாக பெண் அதிகாரிகள் இருந்ததில்லை.  இப்பகுதி மத்திய ரிசர்வ் காவல் படை ரானுவத்துடன் இணைந்து பயங்கரவாத தடுப்புப் பணிகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீநகர் சி.பி.ஆர்.எஃப். ப்ரீன் நிஷாட்டில் அமைந்துள்ளது. இப்பகுதி ஐ.ஜி. கட்டுப்பாட்டின் கீழ் ஜே.கே.புட்கம், காண்டர்பால், மற்றும் லடாக் ஆகிய மூன்று மாவட்டங்களில் 2 வரம்புகள், 22 நிர்வாக பிரிவுகள் மற்றும் 3 மஹிலா நிறுவனங்கள் உள்ளது என்று சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com