செளதியில் வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை

செளதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.
செளதியில் வெளிநாட்டு சுகதாரப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை  (கோப்புப்படம்)

மனிதவள சுகாதார அமைச்சகதின் துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட சுற்றறிக்கையை அடுத்து செளதியில் முக்கிய மற்றும் தலைசிறந்த வல்லுநர்களைத் திவிர்த்து மற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு 10 அண்டுகளுக்கு மேல் ஒப்பந்தம் கிடையாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதம், ‘செளதிஸ்’ என்ற திட்டத்தின் கீழ் மற்ற நாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு பதில் 20 சதவீதம் செளதி மக்களை மருத்துவம் மற்றும் சுகாதார பணிகளில் பணியமர்த்த முடிவெடுக்கப்பட்டது.

அந்த முடிவை, நிறைவேற்றும் விதத்தில் முதற்கட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com