பூச்சி கடித்ததால் சிறுநீரக நோய் ஏற்பட்டு இளம்பெண் பலி

கேரளத்தில் பூச்சி கடிததால் ஏற்பட்ட அரிய வகை சிறுநீரக நோயால் இளம் பெண் உயிரிழந்தார்.
சாண்ட்ரா ஆன் ஜெய்சன்
சாண்ட்ரா ஆன் ஜெய்சன்

கேரளத்தில் பூச்சி கடித்ததால் ஏற்பட்ட அரிய வகை சிறுநீரக நோயால் இளம் பெண் உயிரிழந்தார்.

பூச்சி கடித்ததால் ஏற்பட்ட அரிய வகை சிறுநீரக நோயால் 6 வருடம் போராடிய சாண்ட்ரா ஆன் ஜெய்சனுக்கு (வயது 18) இந்த மாத இறுதியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து சாண்ட்ராவின் தந்தை  ஜெய்சன் தாமஸ் கூறுகையில், 

கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊரான கேரளத்திற்கு வந்தபோது பூச்சி கடித்ததால் இரத்த நாளங்களின் வீக்கம் சம்பந்தப்பட்ட ஹெனோச்-ஷொன்லின் பர்புரா (எச்எஸ்பி) நோய் ஏற்பட்டது.

மேலும் இந்த நோயால் சாண்ட்ரா மூளையில் ஒரு வடு, பார்வை இழப்பு மற்றும் அவரது உடல் முழுவதும் வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார். 2018 க்குள், அவரது இரு சிறுநீரகங்கலும் 70 சதவீதம் சேதமடைந்தது.

இந்நிலையில், கேரளாவில் சிறுநீரக நன்கொடையாளர் ஒருவர் கிடைத்ததையடுத்து அறுவை சிகிச்சைக்காக ஜூன் 21 அன்று கேரள வந்தடைந்தோம். 

இந்நிலையில், திடீரென்று சாண்ட்ராவிற்கு திங்கள்கிழமை மூச்சுத் திணரல் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர் இரத்த அழுத்தம் குறைந்ததால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தார் என கூறினார்.

சாண்ட்ராவின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று அவரின் மேற்படிப்பைத் தொடர திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com