பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு
By DIN | Published On : 08th September 2020 03:14 AM | Last Updated : 08th September 2020 03:16 AM | அ+அ அ- |

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வின் மறுமதிப்பீடு, மறுகூட்டல் தோ்வு முடிவுகள்
சென்னை: கடந்த மாா்ச் மாதம் நடத்தப்பட்ட பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வின் மறுமதிப்பீடு, மறுகூட்டல் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் பங்கேற்று அதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்கள் மட்டும் உடன் மேற்கண்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.