கேரளத்தில் பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

கேரள மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 34 பள்ளி கட்டடங்களை முதல்வர் பிணராயி விஜயன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
கேரளத்தில் பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

கேரள மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 34 பள்ளி கட்டடங்களை முதல்வர் பிணராயி விஜயன் புதன்கிழமை திறந்து வைத்தார்.

கட்டடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து பேசிய பிணராயி, 

கேரள முழுவதும் மேலும் 22 பள்ளிக் கட்டடங்களைக் கட்டிக் கொண்டுள்ளோம். அதில் 14 கட்டடங்களின் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. பொதுக் கல்வியின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக மேலும் 250 பள்ளிக் கட்டடங்களைக் கட்டவுள்ளோம்.

புதிய கேரளத்தை உருவாக்க கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் உதவியுடன் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பள்ளிக்கு ரூ. 5 கோடி செலவிடும் பொது வித்யபயாச சமிரஷனா யஜ்னம் (பொதுக் கல்வியைப் பாதுகாக்கும் பணி) திட்டத்தில் 34 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு சிறப்பான பெயர் உள்ளது, அதைப் பாதுகாக்க அரசு பாடுபடும் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com