எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.களின் மீது நிலுவையில் உள்ள 4,442 வழக்குகள்

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மீது 4,442 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.களின் மீது 4,442 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.களின் மீது தொடரப்பட்ட வழக்குகளின் தகவல்களை வழங்குமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்கள் ஜெனரலிடம் கோரியிருந்தது. 

உயர்நீதிமன்றங்கள் வழங்கப்பட்ட தரவுகளை மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தொகுத்து, உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக சமர்ப்பித்தார்.

அதில், நாடு முழுவதும் தற்போது பதவியில் இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.களின் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ள 2,556 வழக்குகள் உள்பட மொத்தம் 4,442 வழக்குகள் உள்ளதாக கூறப்பட்டது.

பஞ்சாபில் 1983-ல் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதைக் கேட்டு நீதிபதி ரமணா அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 1,217 வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.களின் மீது பதியப்பட்டு நிலுவையில் உள்ளன. அவற்றில் 446 வழக்குகள் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ஆகும்.

பிகார் மாநிலத்தில் தற்போது பதவியில் இருப்பவர்களின் மீது தொடரப்பட்ட 256 வழக்குகள் உள்பட 531 வழக்குகளும், கேரளத்தில் தற்போது ஆட்சியில் இருப்பவர்களின் மீது தொடரப்பட்ட 310 வழக்குகள் உள்பட 333 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

நிலுவையில் உள்ள மொத்த 4,442 வழக்குகளில் 413 வழக்குகள் ஆயுள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களில் தொடர்பானவை, அதில் 174 வழக்குகள் தற்போது பதவியில் இருப்பவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள்.

இதில், ஆஜராகும் கட்டத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், நீதிமன்றங்கள் வழங்கிய ஜாமீன் அல்லாத வாரண்டுகள் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் வாக்குமூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com