பாகிஸ்தானில் ஆளும்கட்சி எம்.பி.க்கள் ராணுவத்தை விமர்சித்தால் சிறை

பாகிஸ்தானில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராணுவத்தை விமர்சித்தால் சிறையில் அடைக்கபடும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஆளும்கட்சி எம்.பி.கள் ராணுவத்தை விமர்சித்தால் சிறை
பாகிஸ்தானில் ஆளும்கட்சி எம்.பி.கள் ராணுவத்தை விமர்சித்தால் சிறை

பாகிஸ்தானில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராணுவத்தை விமர்சித்தால் சிறையில் அடைக்கபடும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பதிவுகளின்படி, 

பாகிஸ்தானின் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் ராணுவத்தை ஏளனம் அல்லது இழிவுபடுத்தும் செயலை செய்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், இந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என குறிப்பிட்டுருந்தனர்.

இந்த மசோதாவின் நோக்கம் ஆயுதப்படைகளுக்கு எதிரான வெறுப்பு மற்றும் அவமரியாதைக்குரிய நடவடிக்கைகளைத் தடுப்பதாகும் என்று பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் அம்ஜத் அலிகான் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com