மகாராஷ்டிரத்தின் ‘என் குடும்பம் என் பொறுப்பு’ திட்டம்: 2.24 கோடி பேருக்கு பரிசோதனை

மகாராஷ்டிரத்தின் ‘என் குடும்பம் என் பொறுப்பு’ திட்டத்தின் கீழ் இதுவரை 2.24 கோடி மக்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தின் ‘என் குடும்பம் என் பொறுப்பு’ திட்டத்தின் கீழ் இதுவரை 2.24 கோடி மக்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,  

‘என் குடும்பம் எனது பொறுப்பு’ என்ற திட்டம் கரோனா பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் மற்றும் தொற்றின் சங்கிலியை தகர்பதற்கும் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ள மாநில அரசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 55,268 குழுக்கள் அமைக்கப்பட்டு 69.94 லட்சம் வீடுகளுக்குச் சென்று 2.24 கோடி மக்களுக்கு பரிசோதனை செய்துள்ளனர். இதன்மூலம், 4,517 கரோனா நோயாளிகளையும் 37,733 தொற்று அறிகுறி உள்ளவர்களையும் கண்டறிந்துள்ளதாக தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com