படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த கன்னட நடிகர் ராக்லைன் சுதாகர்

கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் ராக்லைன் சுதாகர் வியாழக்கிழமை ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
பிரபல நகைச்சுவை நடிகர் ராக்லைன் சுதாகர்
பிரபல நகைச்சுவை நடிகர் ராக்லைன் சுதாகர்

பெங்களூரு: கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் ராக்லைன் சுதாகர் வியாழக்கிழமை ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

கன்னட திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் ராக்லைன் சுதாகர் (வயது 65). இவர் வியாழக்கிழமை பன்னேர்கட்டாவில் 'சுகர்லெஸ்' என்ற படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் திடீரென்று மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்னாள் தலைவர் சா ரா கோவிண்டு தெரிவித்துள்ளார்.

சுதாகர் ஒரு மாதத்திற்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு தற்போது படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் 'வாஸ்து பிரகாரா', 'அய்யோ ராமா', 'டோபிவாலா', 'முகுந்தா முராரி' உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com