

கர்நாடகத்தில் 11 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
முதன்முதலில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அதிதீவிர கரோனா தொற்று, தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.
கரோனா வைரஸின் பி.1.1.7 என்று தற்போது அறியப்படும் அதிதீவிர கரோனா வைரஸ், பிரிட்டனில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது பழைய கரோனா வைரஸைக் காட்டிலும் அதிவேகமாகப் பரவும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகத்தில் 11 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.