மேற்கு வங்கத்தில் நாளை(ஏப்.10) 4-ம் கட்ட வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை(ஏப்.10) நான்காம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.
மேற்கு வங்கத்தில் நாளை(ஏப்.10) 4-ம் கட்ட வாக்குப் பதிவு
மேற்கு வங்கத்தில் நாளை(ஏப்.10) 4-ம் கட்ட வாக்குப் பதிவு


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாளை(ஏப்.10) நான்காம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 44 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெறுகிறது.

மொத்தம் 1,15,81,022 வாக்காளா்கள் வாக்களிக்கும் நான்காம் கட்டத் தோ்தலில், 373 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். டோலிகுங்கே தொகுதியில் பாஜக சாா்பில் மத்திய அமைச்சா் பாபுலால் சுப்ரியோவுக்கு எதிராக மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் அரூப் விஸ்வாஸ் போட்டியிடுகிறாா்.

44 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகளாக தோ்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளதால் 789 கம்பெனி பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூச் பிகாா் மாவட்டத்தில் மட்டும் 187 கம்பெனி படைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் நடைபெறும் மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com