மேற்கு வங்க துப்பாக்கிச் சூட்டில் வீரர்கள் ஈடுபடவில்லை: சிஆர்பிஎஃப் விளக்கம்

மேற்கு வங்கத்தில் 4 வாக்காளர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் சுடவில்லை என மத்திய ரிசர்வ் காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க துப்பாக்கிச் சூட்டில் வீரர்கள் ஈடுபடவில்லை: சிஆர்பிஎஃப் விளக்கம்

மேற்கு வங்கத்தில் 4 வாக்காளர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் சுடவில்லை என மத்திய ரிசர்வ் காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது நடந்த தகராறில் 4 வாக்காளர்களை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிஆர்பிஎஃப் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

கூச் பெஹாரின் சிதல்குச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஜொர்பட்கி வாக்குச்சாவடிக்கு வெளியே 4 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.  இந்த வாக்குச்சாவடியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பணி அமர்த்தப்படவில்லை. மேலும், இந்த சம்பவத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com