அதிகரிக்கும் கரோனா: கேரளத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கேரளத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாநில அரசே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் கேரளத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

கேரளத்தில் உள் அரங்கு கூட்டங்களில் 100 பேர் மற்றும் வெளி அரங்கு கூட்டங்களில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு மூடவேண்டும்.

மதக் கூட்டங்கள் நடத்துவதை தலைவர்கள் தவிர்க்க வேண்டும், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட அளவிலான இருக்கைகளுடன் மட்டுமே இயங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com