ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: 21 நாள்கள் இடைவெளியில் 2 தவணைகள்

இந்தியாவில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி  என்ற கரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 21 நாள்கள் இடைவெளியில் 2 தவணைகள் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: 21 நாள்கள் இடைவெளியில் 2 தவணைகள்


புது தில்லி: இந்தியாவில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி  என்ற கரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 21 நாள்கள் இடைவெளியில் 2 தவணைகள் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

91.6% செயல்திறன் கொண்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரகாலத் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 21 நாள்கள் இடைவெளியில் 0.5 மி.லி. என்ற அளவில் 2 தவணைகளாக செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவசர காலத் தேவைக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தொடர்ந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 3வது தடுப்பூசி இதுவாகும்.

ரஷ்யா உள்ளிட்ட 55 நாடுகளில் ஸ்புட்னிக்-வி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. மருத்துவ வல்லுநகர்கள் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com