கரோனா: மேற்கு வங்கத்தில் கட்சி தலைவர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் மேற்கு வங்க தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் மேற்கு வங்க தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் கடந்த மார்ச் 27ஆம் தேதி முதல் மேற்கு வங்க தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்நிலையில், கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் பிரசாரம் மற்றும் பிற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் ஸ்வாபன் தாஸ் குப்தா கூறியது,

கரோனா பரவும் சூழலில் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தார்கள். நாங்கள் நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்று அவர்களுக்கு உறுதியளித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com