கரோனா அச்சுறுத்தல்: காஞ்சிபுரத்தில் வெறிச்சோடிக் காணப்பட்ட கோயில்கள்!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் உட்பட பல கோயில்கள் புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் வெறிச்சோடிக் காணப்பட்ட காமாட்சி அம்மன் கோயில்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் வெறிச்சோடிக் காணப்பட்ட காமாட்சி அம்மன் கோயில்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் உட்பட பல கோயில்கள் புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

காஞ்சிபுரத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வந்து செல்லும் பிரசித்தி பெற்ற கோயில்களில் காமாட்சி அம்மன் கோயில்,குமரோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்,வரதராஜப் பெருமாள் கோயில்,ஏகாம்பரநாதசுவாமி கோயில் என பல கோயில்கள் உள்ளன.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாலும், வெளி மாநில, வெளி மாவட்ட பேருந்துகள் வருகை குறைந்து விட்டதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகி விட்டது. புதன்கிழமை காலை 8 மணிக்கே பல கோயில்கள் வெறிச்சோடிக் காணப்படுவதையும் பார்க்க முடிந்தது. மத்திய அரசின் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வரக்கூடிய கைலாசாநாதர் கோயில், பாண்டவப்பெருமாள் கோயில் உள்பட காஞ்சிபுரம் நகரில் உள்ள 7 கோயில்களும் மூடியிருப்பதால் காஞ்சிபுரத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் வெறிச்சோடிக் காணப்பட்ட குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் வெறிச்சோடிக் காணப்பட்ட குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில்

காமாட்சி அம்மன் கோயில் முன்புறம் குங்குமம் விற்பனை செய்யும் எஸ்.குமார் என்பவர் கூறுகையில்,

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில்களுக்கு பக்தர்கள் வருகை குறைந்து விட்டதால் வியாபாரமில்லாமல் கடையை கடந்த சில நாட்களாக அடைத்து விட்டேன். வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது என்றார். குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் கணேசன் கூறுகையில் செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். கரோனா காரணமாக ஒன்றிரண்டு பேரைத்தவிர யாரும் வருவதில்லை. கோயிலில் அர்ச்சனை செய்வதில்லை என்பதால் பூஜைப்பொருட்களையும் யாரும் வாங்குவதில்லை. என்ன செய்வதென்று புரியாமல் கடையை திறந்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com