‘அசாம் விமான நிலையங்களில் மார்ச் 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை’: மாநில அரசு

அசாமில் உள்ள விமான நிலையங்களில் மார்ச் 1ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.
அசாம் விமான நிலையங்களில் மார்ச் 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை
அசாம் விமான நிலையங்களில் மார்ச் 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை

அசாமில் உள்ள விமான நிலையங்களில் மார்ச் 1ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. 

இந்நிலையில் வருகின்ற மார்ச் 1 முதல் அசாம் விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில்,

கரோனா பரவல் வருவதையும், தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறுவதையும் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கட்டாய கரோனா பரிசோதனையை மார்ச் 1 முதல் நிறுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இருப்பினும், பயணிகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com