மதுரை எய்ம்ஸ் பணிகள் விரைவில் தொடங்கும்: ஹர்ஷ் வர்தன்

மதுரையில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாநிலங்கவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்(கோப்புப்படம்)
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்(கோப்புப்படம்)

மதுரையில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாநிலங்கவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 வாரங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படாதது ஏன்? என திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஹர்ஷ் வர்தன் கூறியதாவது,

மதுரையில் எய்ம்ஸ் அமைக்கும் பணிக்காக ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஜாப்பான் நிறுவனத்துடன் ஏற்பட்ட தாமதத்தால் காலதாமதமாகியுள்ளது. 

பிரச்னைகள் விரைவில் மத்திய அரசால் தீர்க்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com