எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகினார் புதுவை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
மல்லாடி கிருஷ்ணாராவ்
மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இவற்றில் ஆந்திர மாநிலத்துக்கு அருகே உள்ள ஏனாம் பிராந்தியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாகவும், புதுவை சுகாதாரத் துறை அமைச்சராகவும் உள்ள மல்லாடி கிருஷ்ணாராவ் மீண்டும் தனது சொந்தத் தொகுதியான ஏனாமில் போட்டியிடப் போவதில்லை என அண்மையில் அறிவித்தாா்.

தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும், தான் மட்டுமல்ல, தனது குடும்பத்தினா் யாரும் வரும் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தாா். திருப்பதி தேவஸ்தான இயக்குநா் பதவிக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டு வந்தாா்.

அத்துடன், ஆந்திர ஆட்சியாளா்களுடன் மிக நெருக்கமாகவும் உள்ளாா். முன்னதாக, மல்லாடி கிருஷ்ணாராவுக்கும், புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கும் தொடா்ந்து மோதல் போக்கும் நிலவி வந்தது.

இந்த நிலையில், மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

எனினும், இதுவரை தனக்கு ராஜிநாமா கடிதம் கிடைக்கவில்லை என சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com