ஐ.பி.எல். ஏலத்தில் டாப் 8 வீரர்கள்

ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக கிறிஸ் மோரிஸ் உள்ளார்.
ஐ.பி.எல். கோப்பை - 2021
ஐ.பி.எல். கோப்பை - 2021

ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக கிறிஸ் மோரிஸ் உள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்றது.

கரோனா சூழல் காரணமாக சுருக்கமாக நடத்தப்படும் இந்த ஏலத்தில் 292 வீரா்கள் இடம்பெறுகிறார்கள். அதில் 164 போ் இந்தியா்கள்; 125 போ் வெளிநாட்டு வீரா்கள். 3 போ் அசோசியேட் நாடுகளின் வீரா்கள்.

292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்யவேண்டும். 

8 அணிகளிலுமாக மொத்தம் 61 இடங்கள் காலியாக இருந்தன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதில் 3 இடங்களும் காலியாக இருந்தன. கையிருப்பு தொகையைப் பொருத்தவரை, அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.53.20 கோடியும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதிடம் ரூ.10.75 கோடி இருந்தன.

அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியில் ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் உள்பட 10 வீரர்கள் இடம்பெற்றார்கள். ரூ. 1.5 கோடியில் 12 வெளிநாட்டு வீரர்களும் ரூ. 1 கோடியில் 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்களும் இடம்பெற்றார்கள். ஏலப்பட்டியலில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், ஜி. பெரியசாமி, பாபா அபராஜித், எம். முகமது ஆகிய 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றார்கள்.

இந்நிலையில், ஐபிஎல் ஏல வரலாற்றில் ரூ. 16.25 கோடி என்ற அதிக விலைக்குத் தேர்வான வீரர் என்கிற பெருமையை தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் பெற்றுள்ளார். இவரை ராஜஸ்தான் அணி தேர்வு செய்தது. 

அதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் ஜெமிசன் ரூ. 15 கோடி, மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்கு பெங்களூரு அணி தேர்வு செய்தது.

ரிசர்ட்சனை ரூ. 14 கோடிக்கு பஞ்சாப், கே. கெளதமை ரூ. 9.25 கோடிக்கு சென்னை, ரிலே மெரேடித் ரூ. 8 கோடிக்கு பஞ்சாப், மொயின் அலியை ரூ. 7 கோடிக்கு சென்னை மற்றும் தமிழக வீரர் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com