ஒரே நாளில் 6.58 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை

நேற்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 6,58,674 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஒரே நாளில் 6.58 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 6.58 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நேற்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 6,58,674 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 6 மணி வரை 2,20,877 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,04,49,942 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதாரப் பணியாளர்கள் 62,95,903 பேருக்கு முதல் முறையாகவும், 7,56,942 பேருக்கு இரண்டாம் முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்களப் பணியாளர்கள் 33,97,097 பேருக்கு முதல் முறையாக போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள். அதில் பிகார் 84.7 சதவீதம், திரிபுரா 82.9 சதவீதம், ஒடிசா 81.8 சதவீதம், லட்சத்தீவுகள் 81 சதவீதம், குஜராத் 80.1 சதவீதம், சத்தீஸ்கர் 79.7 சதவீதம், உத்தரகண்ட் 77.2 சதவீதம், மத்திய பிரதேசம் 77 சதவீதம், ஜார்கண்ட் 75.6 சதவீதம் மற்றும் ஹிமாச்சலில் 75.4 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. 

7 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கு குறைவான சுகாதாரப் பணியாளர்களே தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அதில், லடாக் 49 சதவீதம், தமிழகம் 48.8 சதவீதம், தில்லி 46.5 சதவீதம், நாகலாந்து 38.6 சதவீதம், பஞ்சாப் 38.4 சதவீதம், சண்டீகர் 34.3 சதவீதம் மற்றும் புதுவையில் 30.2 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 11,28,091 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com