நியூசிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நியூசிலாந்து நாட்டில் முதற்கட்டமாக இன்று 25 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
நியூசிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நியூசிலாந்து நாட்டில் முதற்கட்டமாக இன்று 25 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கடந்த 2 மாதங்களாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரும் நிலையில், நியூசிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே கூறுகையில்,

பிப்ரவரி 22ஆம் தேதி முதல் நியூசிலாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்தும் முதற்கட்ட பணி தொடங்கவுள்ள நிலையில், ஆக்லாந்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் 25 சுகாதாரப் பணியாளர்களுக்கு சோதனை முயற்சியில் ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்திய பின், முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய தொழிலாளர்கள், ஆபத்தானா கட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் முதியவர்களுக்கு படிப்படியாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com