இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா: மத்திய அரசு

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா: மத்திய அரசு

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் மேலும் 4 பேர் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே, புதிய வகை கரோனா கண்டறியப்பட்ட 25 பேரில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதம், பிரிட்டனில் புதிய வகை அதிதீவிர கரோனா கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிக தடைவிதித்து, சமீபகாலமாக பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள், அவர்களுடன் தொடார்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதில், கரோனா கண்டறியப்படுவோரின் சளி மாதிரிகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. அந்த சோதனை செய்ததில், இதுவரை 29 பேருக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் அந்தந்த மாநிலங்களில் தனிமைப்படுத்தும் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com