தில்லியில் புத்தாண்டு கொண்டாட்டம்: 1,336 வழக்குகள் பதிவு

தில்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விதிமுறைகளை மீறி வெளியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 1,336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா நோய்ப் பரவல் காரணமாக, தில்லியில் பொது இடங்களில் டிசம்பர் இரவு 31 முதல் ஜனவரி 1 காலை 6 மணிவரை பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி இரவு விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 1,330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 26 நபர்கள், வேகமாக வாகனம் ஓட்டியதாக 174 நபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத இடத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தியதற்காக 706 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் 226 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com