
தலைமைச் செயலகம்(கோப்புப்படம்)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சி, டி பிரிவு அரசு ஊழியர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படும்.
ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்புக்கு உள்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
மேலும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.