‘பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44,883 பறவைகள் நாளைக்குள் அழிப்பு’: கேரள அமைச்சர்

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44,883 பறவைகள் நாளைக்குள் அழிக்கப்படும் என மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே ராஜு தெரிவித்துள்ளார்.
‘பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44,883 பறவைகள் நாளைக்குள் அழிப்பு’: கேரள அமைச்சர்

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44,883 பறவைகள் நாளைக்குள் அழிக்கப்படும் என மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே ராஜு தெரிவித்துள்ளார்.

கேரளம், ஹிமாச்சல், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபகாலமாக பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன.

கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சலை மாநிலப் பேரிடராக செவ்வாய்க்கிழமை கேரள அரசு அறிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பறவைகளுக்கும் இந்த தொற்று பரவியிருக்கக்கூடும் என்பதால், மற்ற பகுதிகளுக்கு தொற்று பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பறவைகளை அழிப்பதற்கு கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே ராஜு கூறியதாவது,

கேரளத்தில் புலம்பெயர்ந்த பறவைகளால் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் கோட்டயம் மற்றும் ஆலப்புழாவில் இதுவரை 23,857 பறவைகள் பலியாகியுள்ளது. இதையடுத்து மற்றப் பகுதிகளுக்கு நோய்ப் பரவாமல் தடுக்க ஆலப்புழாவில் 37,654 பறவைகளும், கோட்டயத்தில் 7,229 பறவைகளும் நாளைக்குள் அழிக்கப்படும்.

இந்த ஹெச்5என்8 வைரஸ் மனிதர்களுக்கு பரவாது. பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அடுத்த 10 நாள்களுக்கு கண்காணிக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழிக்கறி, முட்டை போன்றவை விற்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com