மழை நீரை வெளியேற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளிகள் பலி

சென்னை அருகே கொட்டிவாக்கத்தில் சாலையில் தேங்கிய மழைத் தண்ணீரை வெளியேற்ற முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளர்கள் பலியாகினர்.
மழை நீரை வெளியேற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளிகள் பலி

சென்னை: சென்னை அருகே கொட்டிவாக்கத்தில் சாலையில் தேங்கிய மழைத் தண்ணீரை வெளியேற்ற முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளர்கள் பலியாகினர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கம் நேரு நகர் ராஜீவ்காந்தி சாலையில் ஒரு வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை உள்ளது. இந்த கடையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெரு(35), பிகார் மாநிலத்தை சேர்ந்த பிங்கு(22) ஆகிய இருவர் வேலை செய்து வந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக, கடையின் முன்பு சாலையில் தேங்கி நின்ற மழைத் தண்ணீரை ஒரு மின்சார மோட்டார் அகற்றும் பணியில் இருவரும் புதன்கிழமை ஈடுபட்டனர்.

மின்சார மோட்டாரில் குழாய்களை இணைத்துவிட்டு, இருவரும் மின்இணைப்பு கொடுத்துள்ளனர். அப்போது பிங்க், மோட்டாரில் ஒரு ஸ்விட்சை ஆன் செய்தார். இதில் ஸ்விட்சில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், பிங்க் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெரு, பிங்கை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் மின்சாரம் பாய்ந்த நிலையில் தூக்கி வீசப்பட்டனர்.இதைப் பார்த்த அப் பகுதி மக்கள், இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே  இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரது சடலமும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து தரமணி காவல்துறை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com