தென் மாநிலங்களிலிருந்து ம.பி.க்கு கோழி இறக்குமதி செய்ய தடை
By ANI | Published On : 07th January 2021 06:40 PM | Last Updated : 07th January 2021 06:40 PM | அ+அ அ- |

தென் மாநிலங்களில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்த 10 நாள்களுக்கு கோழி இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் சிவராஜ் செளகான் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், குஜராத், கேரளம், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவைக் காய்ச்சல் தொற்று நோயால் பறவைகள் பலியாகி வருகின்றன.
இதைத் தொடர்ந்து முதல்வர் சிவராஜ் செளகான் பேசியதாவது,
"பறவைக் காய்ச்சல் குறித்து நாங்கள் கண்காணித்து வருகின்றோம், கோழி பண்ணைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம். அடுத்த 10 நாள்களுக்கு தென் மாநிலங்களிலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு கோழி இறக்குமதிக்கு தடை செய்துள்ளோம். நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.