கரோனாவால் முன்னாள் அமைச்சர் தாமோதரன் காலமானார்

கோவையில் தனியார் மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 
தமிழக முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் ப.வே.தாமோதரன்
தமிழக முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் ப.வே.தாமோதரன்

கோவை: கோவையில் தனியார் மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகேயுள்ள பச்சார்பாளையத்தை சேர்ந்தவர் ப.வெ.தாமோதரன்(76). ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். முன்னாள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர், எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் மாநில துணைத் தலைவர், ஆவின் முன்னாள் தலைவர் ஆகிய பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி உடல்நலக் குறைவால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்புகள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதனிடையே ஜனவரி முதல் வாரத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் கரோனாவுக்கு பின் கவனிப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திரும்பவும் உடல்நிலை மோசமானதால் மீண்டும் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நோய்த் தொற்றின் தீவிரத்தாலும், நுரையீரல் பாதிப்பாலும் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com