‘உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம்’: மத்திய அமைச்சர்

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்று மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் கைலாஷ் செளத்ரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரி

மத்திய வேளாண் சட்டங்களை அமல்படுத்த தற்காலிகமாக தடைவிதித்து, விவசாயிகளுடன் பேசுவதற்காக குழு ஒன்றை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர்  கைலாஷ் செளத்ரி கூறியதாவது,

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்துள்ளது. வேளாண் சட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, வரவேற்கின்றோம். உச்சநீதிமன்ற குழுவின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com