சுகாதார, முன்களப் பணியாளர்களுக்கு ஜன.16 முதல் தடுப்பூசி: சுகாதாரச் செயலர்

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தமிழக சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை மாலை நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தமிழக சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை மாலை நேரில் ஆய்வு செய்தார்
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தமிழக சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை மாலை நேரில் ஆய்வு செய்தார்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தமிழக சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை மாலை நேரில் ஆய்வு செய்தார்.

கரோனா தடுப்புசி மையத்தை ஆய்வு செய்தவர், தடுப்பூசி போடும் அறை, காத்திருப்பு அறை, வெளியேறும் பகுதி, கண்காணிப்பு அறைகள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : 

தமிழகத்தில் ஜன.16ஆம் தேதி முதல் 166 மையங்களில் இந்த தடுப்பூசி போடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, ராதாபுரம் மற்றும் சிறுவந்தாடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் என நான்கு மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 21 ஆயிரம் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது 5 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. முழுமையாக பாதுகாக்கப்பட்டு, முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என ஜனவரி 25-ஆம் தேதி வரை பதிவு செய்தவர்களுக்கு இந்த தடுப்பூசியானது போடப்படும் .

இந்தியாவில் 2.9 கோடி மக்களுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. எனவே தடுப்பூசியை கண்டு அச்சம் வேண்டாம். தடுப்பூசி, நோய் பரவாமல் தடுக்க ஒரு மைல்கல் என்றார். 

உருமாறிய கரோனாவால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், இதுவரை தமிழகத்தில் நான்கு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் தற்போது குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தார். 

ஒரு காலகட்டத்தில் கரோனாவுக்கு 176 பேர் நாளொன்றுக்கு இறப்பு சதவீதம் இருந்த நிலையில், தற்போது அவை 10 ஆக குறைந்துள்ளது, இதற்காக உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், தற்போதும் முககவசம் அணிவதில் தயக்கம் மக்களிடம் இருப்பதாக வேதனை தெரிவித்த கொண்ட அவர், சமூக இடைவெளி பின்பற்றி முகக் கவசங்கள் அணிவதை மக்களை விழிப்போடு இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தனார்.
 தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 11 பேர் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com