செங்குன்றத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, அலுவலர் இளமுருகன் தலைமையில் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே  நடைபெற்றது.
போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாதவரம்: செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, அலுவலர் இளமுருகன் தலைமையில் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலை   நிகழ்ச்சிகள் மூலம் செங்குன்றம் பஸ் நிலையத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மது அருந்தி வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அதிக சுமை ஏற்றுதல், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறுதல் ஆகியவைகளால் ஏற்படும் இன்னல் குறித்து நாட்டுப்புறக்கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், ராஜராஜேஸ்வரி, காவேரி உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சி செங்குன்றம் பாடியநல்லூர் சுங்கச்சாவடி கும்மிடிப்பூண்டி பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் கூறுகையில்,

சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜனவரி 18 முதல் பிப்ரவரி  17 வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும். மேலும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள்  மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com