ஆரணியில் பெய்த மழையால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணியில் திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்து 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல்மணிகள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அண்மையில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 50ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
அண்மையில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 50ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணியில் திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்து 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல்மணிகள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஆரணி சுற்றுவட்டார இடங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த திடீர் மழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.

இதன் காரணமாக ஆரணி சுற்றுவட்டார இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நெல்மணிகள் முளைத்து வருகின்றன. நெல்மணிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி முளைத்து வரும் நிலையில் அதனை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையில் தவித்து வருகின்றனர்.

ஏக்கர் ஒன்றிற்கு சுமார் 25000ரூபாய் முதல் 30000ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்ட நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் திடீர் மழையால் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பயிர்கடன், நகைக்கடன் வாங்கி சாகுபடி செய்த நிலையில் நெற்பயிர் சேதமடைந்துள்ளதால் எவ்வாறு கடனை திருப்பி செலுத்துவது என தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் பாதிப்படைந்த தங்களது நெற்பயிருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com